LATEST NEWS
“உங்க விஜய்யா, உங்க வீட்டு தாய் மாமனா வந்திருக்கேன்” தாராபுரத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!
தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு திரண்டிருந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி, “உங்க விஜய்யா, உங்க வீட்டு தாய் மாமனா வந்திருக்கேன்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசி தனது உரையைத் தொடங்கினார் . மேலும், தனது அரசு ஊழலை ஒழிப்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்களின் வழிபாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு அருகில் அமைந்திருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை வரிசைப்படுத்திய முதலமைச்சர், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் அதோடு, பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் புதிய திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழக அரசின் அடுத்த கட்ட பாய்ச்சலாக ‘வெற்றிப் பயணத் திட்டம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் தனது தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் பெருமிதத்துடன் பிரகடனப்படுத்தினார்
