உச்சக்கட்ட பரபரப்பு..! 28,000 அடி கீழே சரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்… பதறிப்போன பயணிகள்..! நடுவானில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சக்கட்ட பரபரப்பு..! 28,000 அடி கீழே சரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்… பதறிப்போன பயணிகள்..! நடுவானில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

சிகாகோ நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், திடீரென 28,000 அடிகள் கீழே இறங்கிய நிலையில், மீண்டும் லண்டனுக்குத் திரும்பியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற இந்த விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.50 மணிக்கு அமெரிக்காவின் சிகாகோ ஓ’ஹேர் நோக்கிப் புறப்பட்டது.

Flightradar24 தரவுகளின்படி, விமானம் அயர்லாந்து வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென 37,000 அடியிலிருந்து 9,000 அடி வரை கீழே இறங்கியுள்ளது. இதையடுத்து, உடனடியாக விமானிகள் 7700 என்ற அவசரக் குறியீட்டை அனுப்பிவிட்டு, சிகாகோ பயணத்தைக் கைவிட்டு விமானத்தை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கித் திருப்பியுள்ளனர்.

Advertisement

7700 டிரான்ஸ்பாண்டர் குறியீடானது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தால் முன்னுரிமை அடிப்படையில் கையாளப்பட வேண்டிய ஒரு பொதுவான அவசரநிலையைக் குறிக்க விமானப் பணியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குறியீடு அவசர உதவி தேவைப்படலாம் என்று எச்சரித்தாலும், அதற்கான காரணத்தைக் குறிப்பிடுவதில்லை. மேலும், விமானம் என்ன காரணத்திற்காகத் திடீரென 22,000 அடிகள் (37,000-லிருந்து 9,000 அடி வரை) கீழே இறங்கியது என்பது குறித்த எந்த விவரங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in