உச்சக்கட்ட துணிகரம்.. மருத்துவமனைக்குள் பாட்டிலைத் திறந்த ஊழியர்கள்.. இணையத்தை அதிர வைத்த ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சக்கட்ட துணிகரம்.. மருத்துவமனைக்குள் பாட்டிலைத் திறந்த ஊழியர்கள்.. இணையத்தை அதிர வைத்த ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

பீகார் மாநிலம் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் மருத்துவப் பணியாளர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மருத்துவமனையின் பெண் துப்புரவுப் பணியாளர் மற்றும் ட்ராலி தொழிலாளி என்று கூறப்படும் ஒரு வாலிபரும் மது அருந்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கட்டிடத்திற்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உயிர்காக்கும் அவசரப் பிரிவுக்குள்ளேயே எந்தவித பயமும் இன்றி ஊழியர்கள் மது அருந்திய இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in