“ஆடு திருடு போகல, கனவு கண்டேன்…” தோற்ற கடுப்பில் ஈவிஎம் மீது பழியா..? தவெக – காங்கிரஸ் கூட்டணியை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆடு திருடு போகல, கனவு கண்டேன்…” தோற்ற கடுப்பில் ஈவிஎம் மீது பழியா..? தவெக – காங்கிரஸ் கூட்டணியை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

Published

on

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் நடைமுறைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சேர்ந்து குரல் கொடுப்பது அரசியல் ரீதியான முரண்பாடாக பார்க்கப்படுகிறது. எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பிறகுதான் தமிழகத்தில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் நிலையில், அதே நடைமுறையை எதிர்ப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பின் பதவியேற்றவர்கள் அனைவரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா என்ற வலுவான கேள்சியை நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார்.

மக்களவை, சட்டமன்றம் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, தங்களது கையாலாகாத்தனத்தை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் வீணாகப் பழிபோடுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முறையான ஆதாரங்களும் இன்றி ‘வாக்கு திருட்டு’ நடந்துள்ளதாக ராகுல் காந்தி மழுப்பலான கருத்துக்களைத் தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பாஜக, போலி வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்கி முறையான ஜனநாயகத்தை நிலைநாட்டும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியை முன்வைத்துள்ளது.

Advertisement

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை ஆதரித்து எஸ்ஐஆருக்கு எதிராக தவெக போர்க்கொடி தூக்குவது தற்கொலைக்குச் சமமான அரசியல் பிழை என்றும், அப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்டால் “நான் ஒரு சட்டவிரோத முதல்வர்” என்பதை ஒப்புக்கொண்டு முதல்வர் விஜய் பதவி விலகத் தயாரா என்றும் நயினார் நாகேந்திரன் காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in