நள்ளிரவில் பயங்கரம்..! முதல் மாடியில் இருந்து குழந்தையை வீசிய பெற்றோர்.. மெத்தையை விரித்து காப்பாற்றிய பொதுமக்கள்.. பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நள்ளிரவில் பயங்கரம்..! முதல் மாடியில் இருந்து குழந்தையை வீசிய பெற்றோர்.. மெத்தையை விரித்து காப்பாற்றிய பொதுமக்கள்.. பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

டெல்லி மௌஜ்பூர் பகுதியில் உள்ள பிரபலமான ‘உதம் ஃபிஷ் பாயிண்ட்’ உணவகத்தில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் உணவகத்தில் பற்றிய தீ மளமளவெனப் பரவியதால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற வழியின்றிப் பீதியடைந்து அலறினர்.

உணவகத்திற்குள் புகைமூட்டம் சூழ்ந்ததால் அவசர வழியை நோக்கி ஓடிய 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் முதல் மாடி ஜன்னல் மற்றும் மேற்கூரையில் இருந்து கீழே குதித்தனர். குறிப்பாக, பதைபதைக்கும் அந்தச் சூழலில் அங்கிருந்த சிறிய குழந்தையைக் காப்பாற்றும் நோக்கில் முதல் மாடி ஜன்னலில் இருந்து கீழே வீச, கீழே நின்றிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மெத்தைகளையும் படுக்கைகளையும் விரித்துத் தாங்கிப் பிடித்தனர்.

Advertisement

மேலும் சில பெண்கள் அருகிலுள்ள கட்டடத்தின் மீது குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், பொதுமக்களின் துரித செயலால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in