“இப்படியா நடக்கணும்..?” நண்பனுடன் ஜாலியாக சென்ற மலை ட்ரெக்கிங்.. எமனாக வந்த லாரி.. சம்பவ இடத்திலே துடிதுடித்த 23 வயது மாணவி.. நடுங்கவைத்த விபத்து..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்படியா நடக்கணும்..?” நண்பனுடன் ஜாலியாக சென்ற மலை ட்ரெக்கிங்.. எமனாக வந்த லாரி.. சம்பவ இடத்திலே துடிதுடித்த 23 வயது மாணவி.. நடுங்கவைத்த விபத்து..!!

Published

on

பெங்களூரு புறநகர்ப் பகுதியான நெலமங்காலா தாலுகா, வீரநஞ்சீபுரா பாரே அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிய விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் அலினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலினா தனது நண்பர் ஆல்பினுடன் துமகூரு மாவட்டத்தில் உள்ள தேவராண்டுகா மலைக்கு மலையேற்றம் சென்றுவிட்டு, மீண்டும் பெங்களூரு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கோர விபத்தில் ஆல்பின் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அலினா மற்றும் ஆல்பின் ஆகிய இருவரும் தங்களது படிப்பிற்காகப் பெங்களூரு இந்திராநகரில் உள்ள பிஜி விடுதியில் தங்கி இருந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிக்க நெலமங்காலா போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அலினாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நெலமங்காலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in