CRIME
நள்ளிரவுப் பயங்கரம்..! போலீஸ் சாவடியை உடைத்துக்கொண்டு பக்தர்கள் மீது பாய்ந்த லாரி… 12 பேர் துடிதுடிக்கப் பலி.. நவராத்திரி திருவிழாவில் நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம் சினோர் பகுதியில், தடைசெய்யப்பட்ட செங்குத்தான பாதையில் நள்ளிரவில் நுழைந்த கனரக நெல் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஷீத்லா மாதா கோயிலில் நள்ளிரவு 1:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்காகக் குவிந்திருந்தனர். அந்தச் சமயத்தில், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளையும் சோதனைச் சாவடியையும் உடைத்துக் கொண்டு பாய்ந்த லாரி, பக்தர்கள் மற்றும் கோயில் சுவற்றின் மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்தத் திடீர் விபத்து திருவிழா கொண்டாட்டத்தில் இருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
இந்த அசம்பாவிதத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் உட்பட 27 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தவுடன் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கு சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. லாரியில் ஏற்பட்ட பிரேக் பழுது காரணமாக இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட அந்தப் பாதைக்குள் லாரி எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை முடுக்கப்பட்டுள்ளது
