LATEST NEWS
“என்னடா இப்படி பண்றீங்க..!” லாரி கவிழ்ந்ததும் ஓடிவந்த கூட்டம்.. டிரைவரைக் காப்பாற்ற அல்ல, பீர் பாட்டில்களை அள்ள.. ஆந்திராவில் அரங்கேறிய விசித்திர கூத்து வீடியோ..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூரு நகரில், பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக லாரியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பீர் பெட்டிகளும், பாட்டில்களும் சாலை நெடுகிலும் சிதறி விழுந்தன. விபத்து நடந்த சத்தம் கேட்டுச் சுற்றியிருந்த பொதுமக்களும், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இருப்பினும், அவர்கள் விபத்துக்குள்ளான வாகன ஓட்டுநருக்கு உதவ முற்படாமல், சாலையில் சிதறிக் கிடந்த பீர் பாட்டில்களை அள்ளிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். அங்கு கூடின கும்பல் போட்டி போட்டுக்கொண்டு, தங்களால் இயன்ற அளவு பீர் பாட்டில்களைப் பெட்டி பெட்டியாகவும், கைகளிலும் அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைக் காட்டும் வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
