“அந்த ஒரு துறை எங்களுக்குத்தான் வேணும்..” CM விஜய்க்கு டெல்லி காங்கிரஸ் போட்ட டிமாண்ட்.. தமிழக அரசியலை சூடாக்கும் பின்னணி தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த ஒரு துறை எங்களுக்குத்தான் வேணும்..” CM விஜய்க்கு டெல்லி காங்கிரஸ் போட்ட டிமாண்ட்.. தமிழக அரசியலை சூடாக்கும் பின்னணி தகவல்கள்..!!

Published

on

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை, தங்களது கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் நிதித்துறையை ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை தனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தனது ஆதரவாளர்களிடம் மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த கோரிக்கை கூட்டணி அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், நிதித்துறை போன்ற ஒரு மிக முக்கிய இலாகாவைத் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்க முதலமைச்சர் விஜய் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய முக்கியத் துறையை மற்றவர்களுக்குக் கொடுத்தால், அது தவெக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்றும், அது எதிர்காலத்தில் தங்களது ஆட்சியைப் பலவீனப்படுத்த வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் கருதுவதாகத் தெரிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in