“மாஃபியா கும்பல் தான் கொன்னாங்க..” சொந்த ஆளையே சுட்டுக்கொன்று விட்டு பெண் அதிகாரி செய்த பகீர் காரியம்…. பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாஃபியா கும்பல் தான் கொன்னாங்க..” சொந்த ஆளையே சுட்டுக்கொன்று விட்டு பெண் அதிகாரி செய்த பகீர் காரியம்…. பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை..!!

Published

on

பீகார் மாநிலம் நாளந்தாவில் மதுபான மாஃபியா கும்பலின் வாகனத்தை நள்ளிரவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினர் துரத்திச் சென்றபோது, ஹோம் கார்டு ஒருவர் தவறுதலாகச் சுட்டதில் கலால் துறை காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, மதுபான மாஃபியா கும்பல்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கதையை மாற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கு மாஃபியாக்களுக்கு எதிரானது என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில், வழக்கில் ஒரு அதிரடி ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.

காவலரின் மரணம் குறித்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை மற்றும் தோட்டாக்கள் குறித்த தடயவியல் விசாரணையில், அந்தத் தோட்டா மதுபான மாஃபியாக்களுடையது அல்ல என்றும், போலீஸ் குழுவில் இருந்த ஹோம் கார்டின் துப்பாக்கியில் இருந்துதான் பாய்ந்தது என்பதும் அம்பலமானது. இந்த உண்மை வெளிவந்ததை அடுத்து, வழக்கை திசைதிருப்ப முயன்ற குற்றத்திற்காகப் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது உண்மையை மறைப்பதற்காக மாஃபியாக்கள் மீது பழி போடப்பட்டதா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in