“எங்கள் மதத்தில் இதற்கு அனுமதியுள்ளது…” 2 குழந்தைகளுடன் நடுத்தெருவில் கதறும்… காதல் மனைவி.. கணவனின் உச்சகட்ட துரோகம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்கள் மதத்தில் இதற்கு அனுமதியுள்ளது…” 2 குழந்தைகளுடன் நடுத்தெருவில் கதறும்… காதல் மனைவி.. கணவனின் உச்சகட்ட துரோகம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், கல்லூரிப் படிப்பின் போது பர்வேஸ் என்ற முஸ்லிம் இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தால், தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரைத் திருமணம் செய்துகொண்ட ரீதா என்ற இந்துப் பெண்ணின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ள சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பு ரீதாவிற்காக இந்து மதத்திற்கு மாறத் தயார் என்று பர்வேஸ் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், பர்வேஸின் குடும்பத்தினர் ரீதாவை இஸ்லாம் மதத்திற்கு மாறக் கூறி கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால், அவர் ‘சாதியா தபஸும்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, பர்வேஸ் தனது முதல் மனைவியான ரீதாவை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனை ரீதா எதிர்த்தபோது, தங்களது மதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு அனுமதியுள்ளது எனக் கூறி பர்வேஸின் குடும்பத்தினர் அவரைத் தாக்கியுள்ளனர். தற்போது தங்குவதற்குக் கூட இடமில்லாமல், தமக்கான நீதியைத் தேடி காவல் நிலையங்களுக்கும், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் அலைந்து திரிந்து வருவதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். சொந்த மதத்தையும், தங்களைப் பெற்றவர்களையும் விட்டுவிட்டுச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய நிலைக்குப் பிறகாவது விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்துகளும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in