“இந்த சட்டத்தை மாத்துங்க” கணவன்மார்களுக்கு மன அழுத்தம்… மனைவியுடன் தகராறில் மலையிலிருந்து குதித்து கணவர் தற்கொலை… உருக்கமான வீடியோ வெளியீடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்த சட்டத்தை மாத்துங்க” கணவன்மார்களுக்கு மன அழுத்தம்… மனைவியுடன் தகராறில் மலையிலிருந்து குதித்து கணவர் தற்கொலை… உருக்கமான வீடியோ வெளியீடு..!!

Published

on

குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த தபால் துறை ஊழியரான விஸ்வராஜ்சிங் கோஹில், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கும் தாராபா சர்வெயா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக செப்டம்பர் மாதத்தில் மனைவி காவல் நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைப் புகாரை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த கோஹில், மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹரிச்சந்திரகாட் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1,700 அடி ஆழமான ‘கொங்கண்கடா’ மலைப்பகுதியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

தற்கொலைக்கு முன்பு விஸ்வராஜ்சிங் கோஹில் வெளியிட்ட 13 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது மீதான புகார்கள் பொய்யானவை எனத் தெரிவித்துள்ள அவர், குடும்ப வன்முறைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு கணவன்மார்களுக்கு மன அழுத்தம் தருவதாக வேதனை தெரிவித்து சட்டத்தில் திருத்தம் கோரியுள்ளார்.

Advertisement

மலையடிவாரத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசியைக் கண்ட மக்கள் அளித்த தகவலின் பேரில், ட்ரோன் மற்றும் மலை ஏறுதல் வீரர்களின் உதவியுடன் 24 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவரது உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in