“வெறும் 10 ரூபாய் கிழிந்த நோட்டுக்காக இப்படியா..?” வாடிக்கையாளரின் கொடூர அத்துமீறல்.. டெலிவரி பாய் எடுத்த விபரீத முடிவு.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெறும் 10 ரூபாய் கிழிந்த நோட்டுக்காக இப்படியா..?” வாடிக்கையாளரின் கொடூர அத்துமீறல்.. டெலிவரி பாய் எடுத்த விபரீத முடிவு.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

Published

on

டெல்லி கல்யாண்புரி பகுதியைச் சேர்ந்த பிளப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்தின் டெலிவரி ஊழியரான சமீர் ஹுசைன், வாடிக்கையாளர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித் தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘கேஷ் ஆன் டெலிவரி’ ஆர்டர் ஒன்றைக் கொடுக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அவருக்குக் கிழிந்த 10 ரூபாய் நோட்டைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை வாங்க மறுத்த சமீர் ஹுசைனை அந்த வாடிக்கையாளர் மிகக் கேவலமாகப் பேசி, மிரட்டல் விடுத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்தக் கொடூரமான அத்துமீறல் மற்றும் தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் சமீர் ஹுசைன் டெல்லி காவல்துறையிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார். இருப்பினும், அவரது புகாரின் மீது காவல்துறையினர் எந்தவொரு உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், பூச்சி மருந்தை உட்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உழைத்து வாழும் ஒரு எளிய டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளையும், நீதிக்கான கோரிக்கைகளையும் எழுப்பியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in