அந்த இரவில் பேசியது யார்..? செல்போன் சிக்னல் காட்டிய ரகசியம்.. 7 வயது சிறுமி மயமான வழக்கில் 10 நாட்களாக தொடரும் மர்ம வேட்டையில் அதிரடி திருப்பம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அந்த இரவில் பேசியது யார்..? செல்போன் சிக்னல் காட்டிய ரகசியம்.. 7 வயது சிறுமி மயமான வழக்கில் 10 நாட்களாக தொடரும் மர்ம வேட்டையில் அதிரடி திருப்பம்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் 7 வயது சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக, அவரது மொபைல் போன் கோபுர சிக்னல் ஆய்வின் மூலம் சந்தேகத்திற்குரிய இரண்டு எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிறுமி காணாமல் போன அன்றைய இரவில், இந்த எண்களில் நீண்ட நேரம் பேசிய இருவரைப் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் தற்போது தனித்தனியே தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மாயமாகி இன்றுடன் பத்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரைப் பற்றிய எந்தவொரு துப்பும் கிடைக்காததால் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வரும் வேளையில், இந்த மொபைல் போன் உரையாடல்கள் வழக்கிற்கு மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமியை விரைந்து மீட்க கோரி அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in