“வலிப்பு நாடகம் ஆடி விபரீதம்” தேனி சிறையில் காவலரைத் தாக்கி 17 கைதிகள் அதிரடித் தப்பியோட்டம்…தனிப்படை வேட்டை தீவிரம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வலிப்பு நாடகம் ஆடி விபரீதம்” தேனி சிறையில் காவலரைத் தாக்கி 17 கைதிகள் அதிரடித் தப்பியோட்டம்…தனிப்படை வேட்டை தீவிரம்..!

Published

on

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து, நேற்றிரவு 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதி ஒருவருக்கு நள்ளிரவில் திடீரென வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடியுள்ளனர். அதை நம்பி முதலுதவி அளிக்கச் சென்ற சிறைக் காவலர்களைக் கூட்டுச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு சிறைச் சாவிகளைப் பிடுங்கி தப்பியோடியுள்ளனர்.

200 கைதிகளை மட்டுமே அடைப்பதற்கான கொள்ளளவு கொண்ட இந்தத் தேனி மாவட்டச் சிறையில், விதிகளை மீறி 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், இவர்களைக் கண்காணிக்க வெறும் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துணிகரத் தப்பியோட்டத்தைத் தொடர்ந்து, தென்மண்டல ஐ.ஜி மற்றும் எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்; தப்பியோடிய 17 கைதிகளில் பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிகந்தர் ஆகிய 4 பேரைத் தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையின் மூலம் அண்மையில் மீண்டும் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in