CRIME
அய்யய்யோ.. காற்றில் பறந்த மின் கம்பங்கள்… வேரோடு சாய்ந்த மரங்கள்.. ‘அர்னாப்’ புயலின் கோரத்தாண்டவம்.. பீதியில் மக்கள்..!!
‘அர்னாப்’ புயலின் கொடூரத் தாக்கத்தால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன; குறிப்பாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், வாழைத் தோட்டங்களும் முழுமையாக அழிந்துள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் காற்றில் சாய்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியும் நாசமாகியுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள் பெரும் தவிப்பிலும் ஆழ்ந்த சோகத்திலும் மூழ்கியுள்ளனர். மேலும், ஆத்ரேயபுரம் – பொம்மர்லங்கா இடையேயான முக்கியச் சாலையில் பிரம்மாண்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
மறுபுறம், காக்கிநாடா மாவட்டத்தின் உப்பாடா பகுதியில் உள்ள கடற்கரைச் சாலை புயல் அலைகளின் சீற்றத்தால் அடியோடு உடைந்து உருக்குலைந்துள்ளது. இதேபோல், விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் சூறாவளிக் காற்றினால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் பயிர்கள், சாலைகள் மற்றும் மின்சாரக் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
