CRIME
“நாங்கள் ஒன்றும் வேடிக்கைப் பொருள் அல்ல..!” டிடிஇ செய்த கொடூர காரியம்.. கதறிய இராணுவ வீரரின் மனைவி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
இராணுவ விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய இந்திய இராணுவ வீரர் ஒருவருக்கு ரயிலில் இருக்கை கிடைக்காததால், அவரும் அவரது மனைவியும் பச்சிளம் குழந்தையுடன் ரயிலின் தரையில் படுத்து உறங்கிய அவலத்தைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீரரின் மனைவி கோமல், தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் இராணுவ வீரர்கள் ஒன்றும் வேடிக்கைப் பொருள் அல்ல என்று மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார். ரயிலில் இருக்கை கேட்டு அங்கிருந்த டிடிஇ-யிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கூடுதல் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அவர் இருக்கைகளை ஒதுக்கீடு செய்ததாக கோமல் குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவ வீரர்களுக்குப் பல நேரங்களில் கடைசி நிமிடத்தில்தான் விடுமுறை கிடைக்கும் அல்லது அவசரப் பணி நிமித்தமாக அவர்கள் திடீரென அழைக்கப்படுவார்கள் என்பதால், அவர்களால் முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று கோமல் விளக்கியுள்ளார். ஒரு இராணுவ வீரரின் மனைவியாக, நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் உயிரைக் கொடுக்கும் வீரர்களின் பயணப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே அமைப்பில் உரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், தேசத்தைக் காக்கும் வீரர்களுக்கு நேர்ந்த இந்த நிலையைச் சுட்டிக்காட்டி ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
