CRIME
“வேலை கிடைச்சா மாறிடுவியா..?” 250 கி.மீ துரத்திச் சென்று ஸ்டேஷனிலேயே வளைத்துப் பிடித்த காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. கதறி அழுத காதலன்.. பரபரப்பு பின்னணி..!!
பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்த நிலையில், காவலர் வேலை கிடைத்ததும் திருமணத்தில் இருந்து பின்வாங்கி 250 கி.மீ தூரம் தப்பியோடிய காதலனை, காவல் நிலையத்திற்கே சென்று துரத்திப் பிடித்துக் கரம்பற்றியுள்ளார் பூஜா என்ற இளம்பெண். பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த அன்கேஷ் பாபு என்பவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பூஜாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அன்கேஷ் தீவிரமாகப் படித்துக் காவல் துறையில் பணியில் சேர்ந்தவுடன், பூஜாவின் குடும்பத்தினர் அவரிடமே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால், போலீஸ் வேலை கிடைத்த திமிரில் அன்கேஷ் திருமணத்தை மறுத்துவிட்டு, தனது சொந்த ஊரிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்திற்குப் பணி நிமித்தமாகத் தப்பியோடியுள்ளார்.
காதலன் ஏமாற்றியதை அறிந்த பூஜா, சற்றும் மனம் தளராமல் அவுரங்காபாத் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தனது காதல் குறித்து நியாயம் கேட்டுப் போராடியுள்ளார். இதையடுத்து, காவல் நிலைய சோதனைச் சாவடி அருகிலேயே இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாகப் போலீசாரின் தலையீட்டால், அன்கேஷை ஒப்புக்கொள்ள வைத்த காவல்துறையினர், அருகில் இருந்த ஒரு கோவிலில் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். வேறு பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வரதட்சணை கிடைத்திருக்குமே என்ற சோகத்தில், காதலியின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது அன்கேஷ் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.
