“இது 8-வது கொலை…” மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிகிறது.. சாத்தான்குளம் சம்பவத்தில் கனிமொழி வேதனை..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது 8-வது கொலை…” மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிகிறது.. சாத்தான்குளம் சம்பவத்தில் கனிமொழி வேதனை..!!

Published

on

சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (50), அவரது மனைவி மேரி ரெஜிலா (39) ஆகியோரின் 15 வயது மகள் ஒருவரை, ஞானப்பிரகாஷ் என்ற புரோட்டா மாஸ்டர் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாஷ், நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் முத்துகிருஷ்ணனின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் தாய் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க முயன்ற கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் 10 வயது மகன் பிளசெட் ராஜா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தனர். தொடர்ந்து, வீட்டில் இருந்த இரு மகள்களையும் ஞானப்பிரகாஷ் கடத்திச் சென்ற நிலையில், தட்டார்மடம் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்து சிறுமிகளையும் மீட்டனர்.

Advertisement

இந்நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை முத்துக் கிருஷ்ணனும் உயிரிழந்தார். இதைக் குறிப்பிட்டுள்ள தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி MP, “இது 8-வது கொலை, என்ன சொன்னாலும் மக்களின் உயிரைப் பற்றி கவலையில்லை எனச் செயல்படும் ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள சிறுவனுக்குத் தேவையான உரிய உயர் மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in