CRIME
அய்யய்யோ… 8 மாதக் குழந்தையின் கழுத்தில் கைவைத்த மர்ம நபர்.. அடுத்து நடந்த விபரீதம்.. நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள சௌக் பஜார் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 8 மாதக் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையின் உள்ளே மக்கள் கூட்டமாக இருந்த நேரத்தில், ஒரு வாலிபர் நைசாகக் குழந்தையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்து, அதிலிருந்த தங்க நகையைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்துக் குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோத்வாலி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனின் முகத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அந்த நபரை விரைவில் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் காவல் நிலைய அதிகாரி அல்பனா சிங் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் பஜாரில் குழந்தைகளுடன் வருபவர்கள் தங்களது நகைகள் மற்றும் உடைமைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
