குட் நியூஸ்…! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு..? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடித் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட் நியூஸ்…! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு..? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

Published

on

மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2,500 வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் முழுமையாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாகவும், விடுபட்ட தகுதியான விண்ணப்பதாரர்களின் விவரங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள தகுதியான ஏழை எளிய மக்களுக்கும் இந்த உதவித்தொகை எவ்விதத் தடையுமின்றிச் சென்றடைவதை அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார். இதற்கான நிர்வாக ரீதியிலான ஆரம்பக்கட்டப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததும், முதலமைச்சர் விஜய் அவர்கள் இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in