LATEST NEWS
வாயில் நுரை தள்ளிய நிலையில் ரயில்வே அதிகாரி மரணம்.. அறையில் கிடந்த மர்ம மாத்திரைகள் – கொலையா..? தற்கொலையா..?
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், ரயில்வே உதவி செயல்பாட்டு மேலாளர் அபிஷேக் சிங் அங்குள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள தனது அறையிலேயே சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தார். அவர் வழக்கமாக வீட்டிற்கு வர வேண்டிய நேரத்தைக் கடந்தும் வராததால் தேடிச் சென்ற அவரது குடும்பத்தினர், அவர் தனது அறையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிரயாக்ராஜில் இருந்து வெறும் 4 மாதங்களுக்கு முன்புதான் அபிஷேக் சிங் ஆக்ராவுக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டு வந்திருந்தார். இந்த நிலையில், அவரது இந்தத் துயர முடிவுக்கு ஒரு மூத்த அதிகாரி கொடுத்த கடுமையான மன உளைச்சலும், பணி ரீதியான சித்திரவதையும்தான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
