“ஆர்பிஐ விதியாவது… ஒன்றாவது…” நகையை மீட்க வந்தவரிடம் எகிறிய ஊழியர்.. நிதி நிறுவனத்தில் நடந்த பகீர் அராஜகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஆர்பிஐ விதியாவது… ஒன்றாவது…” நகையை மீட்க வந்தவரிடம் எகிறிய ஊழியர்.. நிதி நிறுவனத்தில் நடந்த பகீர் அராஜகம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், தங்கக் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்திய பிறகும், ரிசர்வ் வங்கியின் விதிகளை மதிக்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்து நகைகளைத் தர மறுத்த நிதி நிறுவன ஊழியர்களின் அராஜகப் போக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மருமகனை வாரிசாகக் குறிப்பிட்டுத் தங்கக் கடன் பெற்ற சில மாதங்களிலேயே மரணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடன் ஆவணங்களில் வாரிசுதாரராகத் தனது பெயர் இருப்பதை உறுதிசெய்யும் சான்றிதழ்களுடன், அந்த வாலிபர் அடகு வைத்த நகைகளை மீட்கச் சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள அதிகாரிகள் முதலில் வாரிசு பட்டியலில் அவரது பெயர் இல்லை என நாடகமாடியுள்ளனர். வாலிபர் முறையான ஆவணங்களைக் காட்டியதும், சட்டப்பூர்வ வாரிசிடம் மட்டுமே நகைகளைத் தருவோம் எனக் கூறி, வாலிபரின் அத்தையை அழைத்து வரச் சொல்லியுள்ளனர்.

அதன்படியே அந்த இளைஞர் தனது அத்தையையும் கூட்டிவந்து, மொத்தக் கடன் தொகையையும் வட்டி உட்பட முழுமையாகச் செலுத்தியுள்ளார். இருப்பினும், அந்த நிறுவன ஊழியர்கள் நகைகளைத் திருப்பித் தர அடம் பிடித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும் நகைகளை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று வாலிபர் வாதிட்டபோது, “நாங்கள் எந்த ஒரு ஆர்பிஐ விதியையும் பின்பற்றுவதில்லை, உங்களுக்கு நகைகளைத் தர என் மனதுக்கு உடன்பாடில்லை” என்று ஊழியர்கள் திமிராகப் பதிலளித்து நகைகளைத் தர மறுத்துள்ளனர். முறையான ஆவணங்கள் இருந்தும், பணத்தைச் செலுத்திய பிறகும் வாடிக்கையாளரை மிரட்டும் தொனியில் பேசிய நிதி நிறுவன ஊழியர்களின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in