இனி இவர்களுக்கும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – முழு விபரம் உள்ளே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி இவர்களுக்கும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – முழு விபரம் உள்ளே..!!

Published

on

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் உள்ள 65 வயது கடந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் சிறப்புத் திட்டம் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்துள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 1,346 நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் மூலம் இந்த அத்தியாவசியப் பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு போய் விநியோகிக்கப்பட உள்ளன. எனவே, இந்தச் சிறப்புச் சலுகையைப் பெற தகுதியுடைய பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in