LATEST NEWS
“உடனே கைது செய்ங்க..” CM விஜய்க்கு கடிதம் எழுதிய மாணிக்கம் தாகூர்… தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு..!!
மாணிக்கம் தாகூர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் ஊழலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள போலி நூல்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் இதேபோல பிற இடங்களிலும் போலி நூல்கள் கொள்முதல் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி நூல்களை, அவற்றின் உண்மையான மதிப்பை விட 4 மடங்கு அதிக விலைக்கு வாங்கி மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் மாணிக்கம் தாகூர் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.
