LATEST NEWS
“பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கிட்டாங்க..” மக்கள் இனி உங்களை தலைநிமிர விடமாட்டாங்க…! திமுக அரசைச் சுளுக்கெடுத்த விஜய்யின் X பதிவு..!!
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றிவிட்டதாக முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியாரின் பெயரைப் பயன்படுத்தித் தொடர்ந்து கொள்ளையடித்து ஊழல் செய்வதையே ஒரு வரலாறாக நிகழ்த்திவரும் திமுகவை, தமிழக மக்கள் இனி ஒருபோதும் தலைநிமிர விடமாட்டார்கள் என்றும் அவர் தனது X சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்காகத் திமுக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனே இந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள விஜய், இத்தகைய நடவடிக்கைகளுக்காகத் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
