மீண்டும் வெடித்த ‘சண்டியர்’ சர்ச்சை: “படம் எடுத்தால் தமிழ்நாட்டை விட்டே வெளியேற நேரிடும்” – எம்பி கமல்ஹாசனுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் வெடித்த ‘சண்டியர்’ சர்ச்சை: “படம் எடுத்தால் தமிழ்நாட்டை விட்டே வெளியேற நேரிடும்” – எம்பி கமல்ஹாசனுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி எச்சரிக்கை..!!

Published

on

மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், அந்தத் தலைப்பிற்குப் புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தலைப்பால் தென் தமிழகத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் சூழல் ஏற்படும் எனத் எச்சரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது கமல்ஹாசனின் ஆணவப் போக்கைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும்போது சாதி, இனம் சார்ந்து உறுதிமொழிக்கு எதிராகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, இந்த விவகாரத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் இந்தத் திரைப்படத்தை எடுக்கவோ அல்லது வெளியிடவோ முடியாது என்றும், மாநிலத்தில் அமைதியற்ற சூழல் உருவாவதைத் தடுக்க முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சரான திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு கமல்ஹாசனிடம் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

மேலும், இந்தப் படத்தின் கதையை விட அதன் தலைப்புதான் தங்களுக்குப் பிரதானப் பிரச்சினையாக உள்ளது என்றும், ‘சண்டியர்’ என்ற பெயர் இடம்பெறக் கூடாது என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாகப் பார்க்காமல், திரைப்படத்தைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும், இதில் ஏதேனும் வெளிநாட்டுத் தூண்டுதல் உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறி, முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in