“போலி பெயர்களில் புத்தகங்கள்..” எழுத்தாளர் பெருமாள் முருகன் உடைத்த அதிர்ச்சி உண்மை..! கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார் அறிவுலக சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போலி பெயர்களில் புத்தகங்கள்..” எழுத்தாளர் பெருமாள் முருகன் உடைத்த அதிர்ச்சி உண்மை..! கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார் அறிவுலக சர்ச்சை..!!

Published

on

கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கட்டப்பட்ட நூலகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு விவகாரத்தை பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். பெரியார் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகம் வெளியிட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். பல்வேறு பதிப்பகங்கள் இருக்க, குறிப்பிட்ட அந்தப் பதிப்பகத்தின் புத்தகங்கள் மட்டும் அதிகளவில் வாங்கப்பட்டிருப்பதோடு, அவற்றின் விலைகளும் அதிகமாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், அங்குள்ள புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களின் பெயர்களைப் பார்த்தால், அவர்கள் இதற்கு முன்பு எந்தப் புத்தகமும் எழுதியது போலத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புத்தகக் கொள்முதலில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய புத்தகங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in