“அவனே போயிட்டான் இனி நான் வாழ மாட்டேன்” காதலன் தற்**லை செய்த சோகம்.. டியூசன் எடுக்க வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவனே போயிட்டான் இனி நான் வாழ மாட்டேன்” காதலன் தற்**லை செய்த சோகம்.. டியூசன் எடுக்க வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அமிர்தா கிருஷ்ணன் (17 வயது), தக்கலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்ததோடு, வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசனும் எடுத்து வந்தார். இவரும் கேரள மாநிலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஜூன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலன் இறந்த சோகத்தில் கடும் மனமுடைந்து காணப்பட்ட அமிர்தா கிருஷ்ணன், சம்பவத்தன்று மதியம் வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் டியூசனுக்கு வந்த மாணவர்கள் அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தம் போட்டனர்; அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மகளின் இறப்பைக் கண்டு கதறி அழுதனர்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in