LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! மாற்றுத்திறனாளி மீது ஏறிச் சென்ற அரசுப் பேருந்து.. 20 நாட்களாக கோமாவில் தவிக்கும் சோகம்..!!
ஹரியானா மாநிலம் ஜிந்த் பேருந்து நிலையத்தில், ஹரியானா ரோட்வேஸ் அரசுப் பேருந்து மோதியதில் நரேந்திர குமார் (47) என்ற மாற்றுத்திறனாளி படுகாயமடைந்தார். கோஹானாவைச் சேர்ந்த இவர், ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது பேருந்து நிலையத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட நரேந்திர குமார், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
விபத்து நடந்து 20 நாட்களுக்கும் மேலாகியும், நரேந்திர குமார் இன்னும் நினைவு திரும்பாமல் கோமா நிலையிலேயே நீடித்து வருகிறார். முதலுதவிக்குப் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக ரோத்தக் நகரில் உள்ள புகழ்பெற்ற பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கோர விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்து குறித்து நரேந்திர குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், சிவில் லைன் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
