LATEST NEWS
“கல்யாணம், கார் ரேஸ்-னு ஜோடியா சுத்துறாரு” – எந்தப் பிரச்சனையும் முதல்வர் கண்டுகொள்வதில்லை… மக்கள் பேச ஆரம்பிச்சிட்டாங்க CM சார் உஷாரு.. நடிகை கஸ்தூரி எச்சரிக்கை..!!
நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் மீது முன்வைக்கப்படும் புகார்கள் குறித்துக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திருச்சி வேட்பாளர் விஜய்! மதுரை கிழக்கு விஜய்! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள்!” எனத் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது கட்சி எம்.எல்.ஏ-க்கள் மீது வரும் புகார்களுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜுனாவும், ராஜ்மோகனும் பேசுவதைக் கேட்பதற்காக மக்கள் ‘விசிலுக்கு’ வாக்களிக்கவில்லை என்று சாடியுள்ள கஸ்தூரி, அவர்கள் என்ன விஜய்க்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பவர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து வருவதால், அதற்குத் தவெக தலைவர் என்ற முறையில் விஜய்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் முதலமைச்சர் விஜய் அதைக் கண்டுகொள்வதே இல்லை என்றும், அவர் பாட்டிற்குத் திருமணம், கார் ரேஸ் என ஜோடியாகச் சுற்றி வருகிறார் என்று பொதுமக்கள் பேசத் தொடங்கிவிட்டதாகக் கஸ்தூரி பதிவிட்டுள்ளார். “கவனம் விஜய் சார்!” என்று எச்சரிக்கும் தொனியில் தனது பதிவை முடித்துள்ள அவரது இந்த எக்ஸ் போஸ்ட் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
