“உன் குடும்பத்தோட மானத்தை வாங்கிடுவோம்..” ஒவ்வொரு மணி நேரமும் மிரட்டல் போன்..” 40 ஆயிரத்துக்காகக் காவலரையே உயிரோடு காவு வாங்கிய லோன் ஆப் கும்பல்!.. – cinefeeds
Connect with us

CRIME

“உன் குடும்பத்தோட மானத்தை வாங்கிடுவோம்..” ஒவ்வொரு மணி நேரமும் மிரட்டல் போன்..” 40 ஆயிரத்துக்காகக் காவலரையே உயிரோடு காவு வாங்கிய லோன் ஆப் கும்பல்!..

Published

on

ஹைதராபாத்தில் லோன் ஆப் தொல்லை தாங்காமல் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசரத் தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் 40,000 ரூபாய் கடன் வாங்கிய கோண்டாப்பூர் பட்டாலியன் காவலர் ஸ்ரீனு (32), உரிய காலத்தில் பணத்தைத் திருப்பிக் செலுத்த முடியாததால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். கடன் கொடுத்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அவரது மனைவியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று காவலரின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகத் தொடர்புடைய லோன் ஆப் ஆபரேட்டர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினாலேயே காவலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

போலீசாரின் விசாரணையின்படி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவசரத் தேவைக்காக ஸ்ரீனு 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை அடைக்க முடியாததால், செயலி நடத்துநர்கள் ஒவ்வொரு மணி நேரமும் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். குடும்பப் பெயரைக் கூறி பிளாக்மெயில் செய்ததோடு, கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஸ்ரீனு, ஹைதராபாத் பஹார் ஷெரீப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in