LATEST NEWS
ஆபாசமா அனுப்பியதற்கு ஆதாரம் இருக்கா..? தவெக எம்.எல்.ஏ-வுக்கு திடீர் ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய அதிர்வலை..!!
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வெறும் வாட்ஸ்அப் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை குற்றவாளியாக முடிவெடுக்கக் கூடாது என்றார். மேலும், “எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்; அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து முறையான விளக்கம் அளித்துள்ளார். அவர் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தெளிவான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆதாரங்கள் ஏதுமின்றி ஒருவர் மீது முன்கூட்டியே குற்றம்சாட்டுவது ‘மீடியா ட்ரையல்’ போன்று மாறிவிடும் என்றும், விசாரணைகளின் முடிவிலேயே உண்மை தெரியவரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்பி-க்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில், மாணிக்கம் தாகூரின் இந்த ஆதரவு கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
