LATEST NEWS
“லாரியை ஏற்றிக் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்” ரூ.3.35 கோடி சுருட்டிய திமுக முன்னாள் அமைச்சர்..? கமிஷனர் அலுவலகத்தில் தொழிலதிபர் கண்ணீர் பேட்டி..!!
திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சிவநேசன் மற்றும் அவரது உதவியாளர் கதிரவன் ஆகியோர் மீது சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் அருண்ராஜ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ.3.35 கோடி மோசடி புகார் அளித்துள்ளார். அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மணல், ஜல்லி குவாரி தொழிலில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.1.25 கோடி ரொக்கமாகப் பெற்றதுடன், 9 லாரிகளை வாங்க வைத்து அவற்றையும் முறைகேடாகப் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தான் கொடுத்த பணத்தையும் சொத்துகளையும் திரும்பக் கேட்பதற்காக 15 முறைக்கும் மேல் நேரில் சென்றபோது, சிவசங்கர் தரப்பினர் லாரியை ஏற்றிக் கொன்று விடுவதாகக் கொலை மிரட்டல் விடுத்ததாக அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பயம் காரணமாக அப்போது புகார் அளிக்கவில்லை என்றும், தற்போது தனக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கேட்டு காவல்துறையை நாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் வாட்ஸ்அப் உரையாடல்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அந்த ஆதாரங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தித் தனது ரூ.3.35 கோடி பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
