LATEST NEWS
எஸ்.பி. வேலுமணிக்குப் புது சிக்கல்.! ₹98 கோடி டெண்டர் முறைகேடு.. 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு பச்சைக்கொடி..!!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ₹98.25 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில், தொடர்புடைய 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர மத்திய அரசு (பிரதமர் அலுவலகம்) அனுமதி அளித்துள்ளது. நீண்ட கால இழுபறிக்குப் பிறகு மத்திய அரசு வழங்கியுள்ள இந்த அனுமதியானது, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த 2014 முதல் 2018 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்தது. இதில் அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றிய கே.எஸ். கந்தசாமி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் எஸ்.பி. வேலுமணி மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நீதிமன்ற உத்தரவு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குப் புதிய சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
