“30 வினாடிகளில் 10 அடி..” தூங்கிக் கொண்டிருந்த மேலாளரைக் கொடூரமாகக் கொன்ற நோயாளி.. போதை மறுவாழ்வு மையத்தில் அரங்கேறிய பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“30 வினாடிகளில் 10 அடி..” தூங்கிக் கொண்டிருந்த மேலாளரைக் கொடூரமாகக் கொன்ற நோயாளி.. போதை மறுவாழ்வு மையத்தில் அரங்கேறிய பயங்கரம்..!!

Published

on

பீகார் சமஸ்திபூரில் உள்ள போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மையத்தின் மேலாளரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார். வெறும் 30 வினாடிகளில் மேலாளரின் தலையில் 10 முறை சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் பயங்கரத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்திய குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில், தனது மகன் இவ்வளவு கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படும்போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என உயிரிழந்த மேலாளரின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in