” என் காதலை ஏற்கமாட்டாயா..?” இளம்பெண்ணை 20 முறை கத்தியால் குத்திய கொடூரன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

” என் காதலை ஏற்கமாட்டாயா..?” இளம்பெண்ணை 20 முறை கத்தியால் குத்திய கொடூரன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தின் குர்ஜா பகுதியில், காதலை ஏற்க மறுத்த சக ஊழியரான இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்திர் மார்க் பகுதியில் உள்ள சுவஸ்திக் பரிசோதனை மையத்தில் மஹக் என்ற இளம்பெண் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார். அதே மையத்தில் லகாவதி பகுதியைச் சேர்ந்த தாஹிர் என்பவரின் மகன் அசாத், கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்ஸ்-ரே உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

பணிபுரியும் இடத்தில் மஹக்கைப் பார்த்த அசாத், அவரைக் காதலிப்பதாகக் கூறித் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அசாத்தின் காதலை மஹக் திட்டவட்டமாக நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. ஒருதலைக் காதல் தோல்வியடைந்ததால் கடும் ஆத்திரமடைந்த அசாத், கத்தியால் மஹக்கின் முகம் மற்றும் கைகளில் 12 முதல் 20 முறை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மஹக் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடிய அசாத்தைக் காவல்துறையினர் பின்னர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in