“இன்னும் 2 நாளில் திருமணம்… ஆனா..” காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. மாப்பிளைக்கு நேர்ந்த கொடூரம்.. கதறும் குடும்பத்தினர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இன்னும் 2 நாளில் திருமணம்… ஆனா..” காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. மாப்பிளைக்கு நேர்ந்த கொடூரம்.. கதறும் குடும்பத்தினர்..!!

Published

on

விகாராபாத் மாவட்டம் பொம்ராஸ்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட துங்கிமெட்லா–கோஸ்கி சாலையில், காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகப் பரிகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் காரில் பயணித்த ஸ்ரீசைலம் என்ற இளைஞரும் ஒருவர் என்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து தனது சொந்த கிராமமான லச்சர்லாவிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண மேளம் கொட்ட வேண்டிய வீட்டில் மரண ஓலம் கேட்டது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in