LATEST NEWS
BREAKING : அண்ணன் சீர் திட்டம்: “இவர்களுக்கு கிடைக்காது” தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு..
தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியாது. மேலும், சொந்தமாக 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களும் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அரசு ஊழியர்கள், குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் மற்றும் குறிப்பிட்ட அளவு நிலம் வைத்துள்ளவர்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஏற்கனவே அரசின் பிற நலத்திட்டங்களில் பலன் பெற்றவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
