CRIME
“அடப்பாவி.. பழிவாங்கத் துடித்த முன்னாள் மருமகன்…” துப்பாக்கியை ரீலோட் செய்து 15 முறை பயந்த தோட்டா.. முன்னாள் மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
பிரேசில் நாட்டின் மாட்டோ க்ரோசோ டோ சுல் மாகாணத்தில் உள்ள மரகாஜு நகரில், விவாகரத்து பெற்ற முன்னாள் மருமகன் ஒருவன் தனது முன்னாள் மாமனார் மற்றும் மாமியாரைச் சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான 50 வயது மதிக்கத்தக்க அந்தத் தம்பதியினர், கடந்த 12-ஆம் தேதி இரவு திறந்தவெளி மதுபான விடுதி ஒன்றில் அமர்ந்திருந்தபோது, பின்னால் வந்த முன்னாள் மருமகன் அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினான். துப்பாக்கியின் தோட்டாக்களை மீண்டும் நிரப்பி 15-க்கும் மேற்பட்ட முறை சுட்டு அவர்களைக் கொலை செய்துவிட்டு, அவன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றான்.
காவல்துறையினரின் விசாரணையில், 16 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகும், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தி அந்த நபர் தனது முன்னாள் மனைவியைத் தொடர்ந்து மிரட்டித் துன்புறுத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஐந்து நாட்களுக்கு முன்பு துப்பாக்கி முனையில் ஒருவரை மிரட்டிய வழக்கில் தனது அண்ணன் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே அவன் முன்னாள் மாமனார், மாமியாரைக் குறிவைத்துள்ளான். இதையடுத்து, தப்பியோடிய கொலையாளியைத் தேடி வந்த பிரேசில் சிறப்புக் காவல் படை, 14-ஆம் தேதி காலை நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு விடுதி அருகே அவனைச் சுற்றி வளைத்தது; அப்போது போலீசாரை நோக்கி அவன் துப்பாக்கியால் சுட முயன்றதால், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.
