CRIME
“ச்சீ.. சொத்துக்காக இப்படியா..?” நடுரோட்டில் தாயைக்கு நேர்ந்த கொடூர கதி.. கல்நெஞ்சக்கார மகனின் கொடூரச் செயலால் அதிர்ந்த கிராமம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள அஹமத்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்ரௌலி கிராமத்தில், சொத்துத் தகராறு காரணமாக வயதான தாயை மகன் ஒருவன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகோதரர்களுக்கு இடையே நிலவி வந்த நிலப் பிரச்சனையின் போது, ஒரு மகன் தாயிடம் ஏமாற்றி நிலத்தைத் தனது பெயரில் பதிவு செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சற்றும் மனிதாபிமானமின்றிப் பெற்ற தாயை மகன் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
வயதான தாயை மகன் ஈவுஇரக்கமின்றித் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மனிதநேயமும் ஒழுக்கமும் சீரழிந்து வரும் இக்காலத்தில், தன்னைப் பெற்று வளர்த்த தாயையே சொத்துக்காக ஒரு மகன் இவ்வளவு கொடூரமாக நடத்தியிருப்பது பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது. இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
