LATEST NEWS
“அம்மாடியோ.. சிறுவயதிலிருந்து ‘அந்த’ விநோதப் பழக்கம்.. திடீரென வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி.. ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் 15 வயதுச் சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் 750 கிராம் எடையுள்ள தலைமுடிக் கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அந்தச் சிறுமிக்குச் சிறுவயதிலிருந்தே தனது தலைமுடியைப் பிடுங்கிச் சாப்பிடும் விநோதப் பழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாகச் சாப்பிட்ட முடிகள் செரிமானம் ஆகாமல், அவரது வயிற்றுக்குள் ஒன்றாகச் சேர்ந்து மிகப்பெரிய திடமான கட்டியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாகச் சிறுமிக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அனந்தபூர் மருத்துவர்கள், சிறுமிக்கு ‘ரபன்சல் சிண்ட்ரோம்’ எனப்படும் அரிய வகை பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழுவினர் அந்தச் சிறுமிக்குத் தீவிர அறுவை சிகிச்சை செய்து, வயிற்றுக்குள் சுருண்டு கிடந்த முடியை வெளியே எடுத்தனர். அகற்றப்பட்ட அந்த முடிக் கட்டி 750 கிராம் எடையுடன், சுமார் 1.12 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியது; தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தச் சிறுமி நலமுடன் உள்ளார்.
