“அந்த பொறுப்பு கேட்டு ஒரே சண்டை” அதிரும் அறிவாலயம்… தலைமை மீது கடும் கோபத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்..? வெளியான பரபரப்பு தகவல்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த பொறுப்பு கேட்டு ஒரே சண்டை” அதிரும் அறிவாலயம்… தலைமை மீது கடும் கோபத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்..? வெளியான பரபரப்பு தகவல்..!

Published

on

திமுக தலைமை மீது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியின் உயர்மட்ட முடிவுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற மனவருத்தமே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த அதிருப்தியின் எதிரொலியாகவே, கடந்த 16-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லத் திருமண விழாவைக்கூட அவர் புறக்கணித்துவிட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அவர் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Advertisement

மேலும், கட்சியில் தனக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டால் மட்டுமே இனி தலைமையுடன் சமாதானமாவது என்ற உறுதியான முடிவில் அனிதா ராதாகிருஷ்ணன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் திமுக தலைமை அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in