மூடநம்பிக்கையின் உச்சம்.. “9 வயசு பையன் இறந்ததுக்கு இவங்கதான் காரணமா..?” இரவு 10 மணிக்கு வீடு புகுந்த 25 பேர் கும்பல்…! ஆற்றங்கரையில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

மூடநம்பிக்கையின் உச்சம்.. “9 வயசு பையன் இறந்ததுக்கு இவங்கதான் காரணமா..?” இரவு 10 மணிக்கு வீடு புகுந்த 25 பேர் கும்பல்…! ஆற்றங்கரையில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தின் சர்காபத்தர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்ஹான் கிராமத்தில், 9 வயது சிறுவன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த குசும் தேவி என்ற தாயா தேவி என்பவரைக் ‘சூனியக்காரி’ எனக் குற்றம் சாட்டி அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் சிவம் குமாருக்கு பாட்னா மற்றும் ஜமுய் பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்; இதற்குக் காரணத்தை அறிவியல் ரீதியாக ஆராயாமல், குசும் தேவி சூனியம் வைத்ததால்தான் சிறுவன் இறந்ததாகக் கருதிய உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஆத்திரமடைந்துள்ளனர்.

இரவு சுமார் 10 மணியளவில் 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் குசும் தேவியின் வீட்டிற்குச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கிராமத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் தடிகளாலும் கோடாரியாலும் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலையும் உயிரிழந்த சிறுவன் சிவம் குமாரின் உடலையும் ஆற்றங்கரையில் தோண்டப்பட்ட ஒரே குழியில் புதைத்துள்ளனர்; தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேடுதலுக்குப் பிறகு இருவரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக ஜமுய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பாக ரஞ்சு தேவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் குற்றம் நடந்த இடத்திலிருந்து ரத்தக் கறை படிந்த சட்டை, தடி மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய டிங்கு சர்மா, பினு சர்மா, காம்தேவ் சர்மா, குந்தன் மண்டல், நிதிஷ் சர்மா, சந்தன் குமார், சனாதன் சர்மா, ஜெயபிரகாஷ் சர்மா மற்றும் குட்டு மிஸ்திரி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதுடன், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளைத் தேடி வருவதாக ஜாஜா எஸ்டிபிஓ ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in