CRIME
“திருமணம் செய்ய முடியாது, கொன்றுவிடுவேன்..” திமுக நிர்வாகி மீது கல்லூரிப் பெண் பகீர் புகார்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!
தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வரும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதோடு, அவரிடமிருந்து பணத்தையும் பறித்து மோசடி செய்ததாகக் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஹஷத்பாஷா மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், ஹஷத்பாஷா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நெருங்கிப் பழகியதாகவும், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவ்வப்போது தன்னிடம் பெருமளவில்
பணம் பெற்று மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டித் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட திமுக நிர்வாகி ஹஷத்பாஷா தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்யப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
