“என் மகள் மதுவுக்கு அடிமையா..?” ஐஸ்வர்யா குறித்துப் பரவிய வதந்திகளால் கொதித்தெழுந்த நடிகர் அர்ஜுன்… அதிரடி நடவடிக்கை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“என் மகள் மதுவுக்கு அடிமையா..?” ஐஸ்வர்யா குறித்துப் பரவிய வதந்திகளால் கொதித்தெழுந்த நடிகர் அர்ஜுன்… அதிரடி நடவடிக்கை..!!

Published

on

நடிகர் அர்ஜூனின் இளைய மகள் அன்ஜனா திருமணத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூனின் கணவர் உமாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாததால், சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவின. ஆரம்பத்தில் மகளின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து அமைதி காத்த அர்ஜூன், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனது மகளை மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்தும் இழிவான விமர்சனங்களைப் பார்த்து கொந்தளித்துள்ளார். பொதுவெளியில் இருப்பதால் யார் வேண்டுமானாலும் அவதூறு கதைகளைப் புனையவோ, நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவோ உரிமை இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் தங்களது அமைதியை பலவீனமாகவோ அல்லது ஏற்றுக்கொள்வதாகவோ கருதக் கூடாது என எச்சரித்துள்ளார். தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்துள்ளதாகவும், அவதூறுகள் தொடர்ந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இது தனது மகளை மட்டும் சார்ந்த பிரச்சினை அல்ல என்றும், ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் தனிப்பட்ட தேர்வுகளும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகவும் அர்ஜூன் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆதரவு இல்லாத பெண்களுக்கு இத்தகைய அவதூறுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ எந்தப் பெண்ணும் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in