LATEST NEWS
“எதிரிக்கு எதிரி நண்பன்..” முதல்வர் விஜய்யை வீழ்த்த பாஜகவுடன் கைகோர்க்கிறதா திமுக..? முரசொலி வெளியிட்ட செய்தியால் பரபரப்பு..!!
தமிழக அரசியலில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு எதிராக திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 11-ஆம் தேதி வெளியான முரசொலி இதழில், தீபாவளிப் பண்டிகை காலத்தில் தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த திமுக, தற்போது தனது கட்சி நாளேட்டிலேயே பாஜக தலைவரின் விமர்சனத்தை முதன்மைப்படுத்தியிருப்பது அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய்யின் எழுச்சிக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக பக்கம் சென்றுள்ளதால், தமிழகத்தின் கூட்டணி சமன்பாடுகள் மாறியுள்ளன.
இதனால், ஆளுங்கட்சியான தவெகவை எதிர்கொள்ள எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் திமுகவும் பாஜகவும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாஜக மீதான திமுகவின் விமர்சனங்கள் குறைந்து வருவதும், தவெக அரசுக்கு எதிரான இரு கட்சிகளின் ஒருமித்த தாக்குதலும் தமிழக அரசியலில் புதிய கூட்டணி வியூகங்களுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
