LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு..! திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு.. திமுகவுக்கு அடுத்தடுத்து ஷாக்.!!
ரூ. 5 கோடி மதிப்பிலான குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் உள்ள ஐயர் பங்களா மற்றும் எழில் நகர் பகுதிகளில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் இல்லங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் பூவந்தி ஆகிய பகுதிகளில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகளிலும் காவல்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கல்குவாரி டெண்டர் ஒதுக்கீடு மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
