LATEST NEWS
“கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி”16 லட்சத்துடன் எஸ்கேப் ஆன மணப்பெண்”… 2 திருமணங்களை மறைத்து 3-வது கல்யாணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சர்வேயரான விஷால் விஸ்வகர்மா, மே 18, 2025 அன்று பிரகதி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு ஓராண்டு கழித்து, ஜூன் 18, 2026 அன்று பிரகதி வீட்டிலிருந்து சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ1 லட்சம் ரொக்கத்துடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் சென்ற பிறகு விஷால் நடத்திய விசாரணையில், பிரகதி ஏற்கனவே 2017-ஆம் ஆண்டில் வெவ்வேறு நபர்களிடம் இரண்டு திருமணங்கள் செய்திருந்த விவரமும் அதற்கான ஆவணங்களும் தெரியவந்தன. இது குறித்துக் கேட்பதற்காக ஆகஸ்ட் 13, 2026 அன்று விஷாலும் அவரது தம்பியும் மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், விஷயத்தை மூடிமறைக்க ரூ.20 லட்சம் பணம் தருமாறும், இல்லையெனில் பொய் வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கணவரின் புகாரின் அடிப்படையில், பிரகதி, அவரது பெற்றோர் உட்பட மொத்தம் 8 பேர் மீது பர்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
