LATEST NEWS
“அதெல்லாம் பொதுவெளியில் சொல்லக்கூடாது..” காதலியைப் பார்க்க 3,200 கி.மீ பைக்கிலேயே பறந்த முதல்வர்.. மேடையில் உடைத்த ருசிகர ரகசியம்..!!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனியார் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர், திருமணத்திற்கு முன்பு மனைவி கீதாவை காதலித்தபோது காதலியை சந்திக்க ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு 3,200 கிலோமீட்டர் பைக்கில் சென்று இருக்கிறீர்கள். இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் செல்ல உங்களுக்கு எப்படி துணிவு வந்தது என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
அதற்கு ரேவந்த் ரெட்டி, “காதலிக்கும்போது காத்திருப்பது எவ்வளவு கடினம். அது காதலில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அது என் தனிப்பட்ட விஷயம்” என கூறினார். “அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது” என சிரித்து கொண்டே பதிலளித்தார். இதனை கேட்ட அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
